லே முதல் கன்னியாகுமரி வரை எந்த சாவாலையும் சந்திக்க இந்திய விமானப்படை தயார்: சர்தாக் குமார்

லே முதல் கன்னியாகுமரி வரை எந்த சவாலையும் சமாளிக்க இந்திய விமானப்படை தயாராக உள்ளது என சர்தாக் குமார் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 20 முதல் 24 வரை ஜோத்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படை மற்றும் பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படையின் இருதரப்பு பயிற்சியான ‘பாலைவன நைட்-21’ பயிற்சியில் பங்கேற்ற ஸ்குவாட்ரன் தலைவர் சர்தாக் குமார் இது ஒரு சிறந்த கற்றல் அனுபவம் என கூறினார்.

இந்திய விமானப்படையின் சுகோய் உட்பட பல போர் விமானங்களை இந்தியாவும், பிரான்சும் களமிறக்கி உள்ளன. இந்திய விமானபடையின் ரஃபேல் போர் விமான பைலட் மற்றும் ஸ்குவாட்ரன் தலைவர் சர்தக் குமார் சனிக்கிழமை கூறுகையில், லே முதல் கன்னியாகுமரி வரை எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்த படை தயாராக உள்ளது என கூறினார்.

ரபேலால் நாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல பகுதிகளில் செயல்பட முடியும். எந்தவொரு நான்காம் தலைமுறை அல்லது ஐந்தாவது தலைமுறை விமானம் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் ரபேல் செய்து முடிக்கும் என சர்தாக் குமார் ஏஎன்ஐயிடம் கூறினார்.

ரஃபேல்கள் (இந்திய விமானப்படை) தற்போது வரை மிக வேகமாகவும், மிக முன்னேறியதாகவும் உள்ளன என்றும், இந்திய ரஃபேல்கள் பிரான்ஸ் ரபேல்களை விட மேம்பட்டவை என சர்தாக் குமார் கூறினார்.

‘பாலைவன நைட்-21’ வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்திய விமானப்படையின் செயல்பாடுகளில் ரபேல் ஒருங்கிணைப்புக்கு இது மிகவும் முக்கியமான பயிற்சியாக உள்ளது.

“நாங்கள் அவர்களின் (பிரான்ஸ்) விமானிகளுடன் ரபேல் காக்பிட்களில் பறந்தோம். வெவ்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம், அதே போல், அவர்களும் எங்களிடம் இருந்து கற்றுக்கொண்டனர். நாங்கள் இருவரும் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொண்டோம்” என்று அவர் குமார் கூறினார்.

இந்திய விமானப்படையின் சுகோய், மிராஜ் உட்பட பல போர் விமானங்களை இந்தியாவும், பிரான்சும் களமிறக்கி உள்ளன.

பிரான்ஸ் தனது ரபேல், ஏர்பஸ் A-330 மல்டி ரோல் டேங்கர் டிரான்ஸ்போர்ட் (MRTT), A-400M போக்குவரத்து விமானம் மற்றும் சுமார் 175 பணியாளர்களுடன் இந்த பயிற்சியில் பிரான்ஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை விமானங்கள் மிராஜ் 2000, Su-30 MKI, ரபேல், IL-78 விமான எரிபொருள் நிரப்பும் விமானம், ஏர்போர்ன் முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (AWACS) மற்றும் AEW & C விமானம் ஆகியவை பங்கேற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *