புதின் வருகையின் போது ரஷ்ய இராணுவ தளங்களை இந்தியா பயன்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம்..?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த மாதம் 6 ஆம் தேதி இந்தியா வர உள்ளார். இந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையே முக்கியமான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டிசர்பர் 6 ஆம் தேதி இந்தியா, ரஷ்யா இடையே 2+2 அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இதற்காக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஆகியோர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை அடுத்து இந்தியா 2+2 பேச்சுவார்த்தை நடத்தும் நான்காவது நாடு ரஷ்யா ஆகும்.

இதில் முக்கியமாக ரிலோஸ் எனப்படும் பரஸ்பர பரிமாற்ற தடவாள ஒப்பந்தம் (RELOS) அல்லது இராணுவ வசதி பரிமாற்ற ஒப்பந்தம். இந்தியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளின் கடற்படை தளங்கள் மற்றும் விமான தளங்களை பயன்படுத்தி கொள்ளும் ஒப்பந்தம் ஆகும். இதன் மூலம் ரஷ்ய தளங்களை இந்தியா பயன்படுத்தி கொள்ள முடியும். தனது விமானம் அல்லது கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியும்.

இதனால் இந்திய போர் கப்பல்களால் நீண்ட நேர பயணத்தை மேற்கொள்ள முடியும். இந்தயா ஏற்கனவே இதேபோன்ற ஒப்பந்தத்தை அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஓமன், தென்கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் செய்துள்ளது. மேலும் இங்கிலாந்து, வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இரண்டாவதாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அணுசக்தியில் இயங்ககூடிய நீர்மூழ்கி கப்பலை குத்தகைக்கு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து 2011 முதல் குத்தகைக்கு எடுத்த INS சக்ரா அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை இந்தியா பயன்படுத்தி வருகிறது. தற்போது மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பலை குத்தகைக்கு எடுக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also Read: பாகிஸ்தானில் மீண்டும் அமெரிக்க இராணுவ தளம்..? சிக்கலில் இம்ரான்கான்.. நேட்டோ, பாகிஸ்தான் இராணுவம் இடையே பேச்சுவார்த்தை..

மூன்றாவது ஒப்பந்தம் AK-203 துப்பாக்கி தயாரிப்பது ஆகும். இதற்காக உத்திரபிரதேசத்தின் அமேதியில் உள்ள தொழிற்சாலையில் துப்பாக்கி தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 5,100 கோடி என கூறப்பட்டுள்ளது. ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 700,000 துப்பாக்கிகள் வரை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA சோதனை விமானத்திற்கு அடுத்த வருடம் அனுமதி..?

இது தவிர இராணுவ தொழிற்நுட்ப பரிமாற்றம், Su-30MKI, Mig-29 போர் விமானங்கள் மற்றும் 400 T-90 டாங்கிகள் வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம். மேலும் ஆப்கானிஸ்தான் தொடர்பான பிரச்சனை, தீவீரவாதம், போதைபொருள் கடத்தல், விண்வெளி, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.

Also Read: ரஷ்ய அதிபர் புதின் வருகையின் போது S-500 மற்றும் S-550 ஏவுகணை அமைப்பு கையெழுத்தாக வாய்ப்பு..?

Leave a Reply

Your email address will not be published.