இருதரப்பு வர்த்தகத்தை ரூபாயில் மேற்கொள்ள இந்தியா, UAE இடையே ஒப்பந்தம்..?

இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் நங்கள் நாட்டு நாணயத்தில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். மும்பையில் நடைபெற்ற முதலீடுகளுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா உயர்மட்ட கூட்டு பணிக்குழுவின் 10வது கூட்டத்தில் நடந்த விவாதத்தின் ஒரு பகுதியாக இருந்தாக வர்த்தக அமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்தது.

இந்த கூட்டத்திற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அபுதாபி எமிரேட்ஸ் நிர்வாக கவுன்சில் உறுப்பினர் ஷேக் ஹமத் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் இந்திய ரிசர்வ் வங்கி சர்வதேச வர்த்தகத்தை ரூபாயில் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை வங்கிகளுக்கு அனுமதித்தது.

இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரி ஒப்பந்தத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்குவதற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸுன் வேண்டுகோளை இருதரப்பினரும் மறுஆய்வு செய்ததாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விரைவாக தீர்க்க இந்தியாவில் உள்ள UAE பாஸ்ட் டிராக் மெக்கானிசத்திற்கு தேவையான ஆதரவை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுல் ஒரு பொதுவான கட்டண தளமாக UPI சேவையை ஏற்றுக்கொள்வது தொடர்பாக பேச்சுவாரத்தை நடத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். உணவு பாதுகாப்பு, உற்பத்தி, உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு முதலீடுகளை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மே 1 அன்று இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 99 சதவீத இந்திய பொருட்களுக்கு முதல் ஆண்டில் 90 சதவீதத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளில் பூஜ்ஜிய வரி என்ற அடிப்படையில் அனுமதிக்கும். அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 80 சதவீத பொருட்களுக்கு வரி இல்லாமல் இந்தியா அனுமதிக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் இது 90 சதவீதமாக உயரும்.

Leave a Reply

Your email address will not be published.