பாரத் டைனமிக்ஸ் மற்றும் இந்திய இராணுவம் இடையே டாங்கி எதிர்ப்பு ஏவுகணை தயாரிக்க ஒப்பந்தம்..

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இந்திய இராணுவம் 3,131 கோடி மதிப்பில் கொங்குர்ஸ்-எம் (Konkurs-M) டாங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகளை தயாரித்து வழங்குவதற்கு பிப்ரவரி 2 ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கொங்குர்ஸ்-எம் என்பது இரண்டாம் தலைமுறை காலாட்படை தொட்டி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணையாகும். இது கவச வாகனங்களை அழிக்க கூடியது. இந்த ஏவுகணையை BMP-II டாங்கி அல்லது தரை லாஞ்சரிலிருந்தோ ஏவலாம். கொங்குர்ஸ்-எம் ஒப்பந்தம் உட்பட பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 11,400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது.

இந்த கொங்குர்ஸ்-எம் ஏவுகணையை ரஷ்யாவின் உற்பத்தியாளரின் உரிம ஒப்பந்தத்தின் கீழ் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஏவுகணையை இந்திய இராணுவத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் நட்பு நாடுகளுக்கும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் உற்பத்தியை அதிகரித்துள்ளது. கொங்குர்ஸ்-எம் எவுகணையை மட்டுமல்லாமல் மேன்-போர்ட்டபிள் டாங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள், நாக், மிலன்-2T மற்றும் அமோகா ஆகியவையும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read: ஜம்மு காஷ்மீரில் LeT/TRF அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…

புதுடெல்லியில் கையெழுத்தான இந்த கொங்குர்ஸ்-எம் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இறக்குமதியை குறைப்பதற்கும், பாதுகாப்புத்துறையில் ஆத்மநிர்பார் பாரத்தை எட்டுவதற்கும் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக நிர்மலா சீத்தாராமன் தனது பட்ஜெட் 2022 உரையில் கூறியுள்ளார்.

Also Read: சண்டை இனிமேல்தான் ஆரம்பம்.. தாலிபானை எச்சரித்த ISIS-K பயங்கரவாத அமைப்பு..

டாங்கி எதிர்ப்பு ஏவுகணையான கொங்குர்ஸ்-எம், 75 முதல் 4000 மீட்டர் வரை தாக்குதல் வரம்பை கொண்டுள்ளது. 19 வினாடிகள் பறக்கும் நேரம், 22.5 கிலோ எடை, 1,150 மிமீ நீளம், 135 மிமீ விட்டம், விநாடிக்கு 208 மீட்டர் வேகத்தை கொண்டுள்ளது. இதனை BMP-II டாங்கி அல்லது தரை லாஞ்சரிலிருந்து ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.