பணக்காரர்களின் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி…
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும், உலகின் 10வது பணக்காரராகவும் மாறியுள்ளார்.
துறைமுகம், எரிசக்தி மற்றும் விமான நிலையங்கள் என பல்வேறு துறைகளில் அதானி குழுமம் கால்பதித்துள்ளது. செவ்வாயன்று ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள குறியீட்டின்படி, கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 88.5 பில்லியன் டாலர். அதே நேரத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டாலர் ஆகும்.
முகேஷ் அம்பானி கடந்த 14 ஆண்டுகளாக இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த நிலையில் 12 பில்லியன் டாலர் உயர்வுடன் அதானி முதலிடத்தில் உள்ளார். மேலும் இந்த ஆண்டில் உலகில் அதிக செல்வத்தை ஈட்டியராகவும் உள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தியதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 600 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. ஜனவரி தொடக்கத்தில் இருந்து அதானியின் சொத்து மதிப்பு 12 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. அதேநேரம் அம்பானியின் சொத்து மதிப்பு 2.07 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
Also Read: குஜராத்தில் 1,66,000 கோடியை முதலீடு செய்ய உள்ள ஆர்சிலர் மிட்டல் நிறுவனம்..
தற்போது அதானி 12 துறைமுகங்களை இயக்கி வருகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய துறைமுகங்களை இயக்கும் நிறுவனமாக திகழ அதானி திட்டமிட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் 7 விமான நிலையங்களின் கட்டுப்பாட்டை அதானி குழுமம் பெற்றுள்ளது.
Also Read: சீனாவில் இருந்து வெளியேறும் சிப் நிறுவனம்.. இந்தியாவிற்கு மாற்ற முடிவு..
நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் பயணிகளில் கிட்டத்தட்ட 25 சதவீதம் பேர் அதானி விமானநிலையம் வழியாக பயணம் செய்கிறார்கள். அதானி க்ரீன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் பங்குகள் 2020 ஆம் ஆண்டிண் தொடக்கத்தில் இருந்து 1,000 சதவீதத்திற்கும் அதிகமாகவும், அதானி எண்டர்பிரைசஸ் 730 சதவீதத்திற்கும் அதிகமாகவும், அதானி டிரான்ஸ்மிஷன் 500 சதவீதத்திற்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது.