வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் அபியாஸ் விமான சோதனை வெற்றி..!
இன்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஒடிசாவில் அதிவேக செலவழிக்கக்கூடிய வான்வழி இலக்கு (HEAT) சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. அபியாஸ் சோதனை வெற்றிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் அபியாஸ் விமான சோதனை ஒடிசாவில் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை எல்லையில் (ITR) நடத்தப்பட்டது. அபியாஸ் விமானம் இந்தியாவின் உள்நாட்டு திறனை வலுப்படுத்துகிறது. மேலும் குறைந்த உயரத்தில் விமானத்தின் செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அதிக சூழ்ச்சித்திறன் உள்ளிட்டவை சோதனையின் போது நிருபிக்ககப்பட்டன.
அபியாஸ் விமானம் ஒரு தரை அடிப்படையிலான முன்பே நியமிக்கப்பட்ட குறைந்த உயர விமான பாதையில் பறக்கவிடப்பட்டது. இது ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் இலக்கு அமைப்பு உட்பட ITR ஆல் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கண்காணிப்பு சென்சார்களால் கண்காணிக்கப்பட்டது.
இரண்டு 68 மிமீ பூஸ்டர் ராக்கெட்டுகளின் உதவியுடன் மொபைல் லாஞ்சரில் இருந்து அபயாஸ் ஏவப்பட்டது. சிறிய டர்போஜெட் இயந்திரம் அதிக சப்சோனிக் வேகத்தை தக்க வைக்க தொடங்கும் வரை இரட்டை ராக்கெட் பூஸ்டர்கள் ஆரம்ப முடுக்கத்தை வழங்க உதவுகின்றன. பின்னர் ஏவுதல் கட்டத்தின் முடிவில் பர்ன்அவுட் பூஸ்டர் ராக்கெட்டுகள் தூக்கி எறியப்படுகின்றன. அதன்பிறகு எரிவாயு-விசையாழி இயந்திரம் பயண கட்டத்தில் வாகனத்தை இயக்குகிறது.
Also Read: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ALH MK III ஹெலிகாப்டரை பாகிஸ்தான் எல்லையில் நிலைநிறுத்திய கடற்படை..!
அபியாஸ் விமானம் மைக்ரோ எலக்ட்ரோமெக்கனிக்கல் சிஸ்டம்ஸ் அடிப்படையிலான இன்டர்ஷியல் நேவிகேஷன் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இது வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டுக்கான விமான கட்டுப்பாட்டு கணினியையும், மிக குறைந்த உயரத்தில் பறக்கும் ரேடியோ அல்டிமீட்டரையும், என்கிரிப்டடு தகவல் தொடர்புக்கான தரவு இணைப்பையும் கொண்டுள்ளது.
Also Read: AMCA ஐந்தாம் தலைமுறை போர் விமான இன்ஜின் தயாரிப்பில் இந்தியாவுடன் இணைய உள்ள அமெரிக்கா..?
அபியாஸ் விநாடிக்கு 180 மீட்டர் வேகத்தில் பறக்ககூடியது. அபயாஸ் ஒரு ஆட்டோபைலட்டின் உதவியுடன் தானாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயுத பயிற்சிக்கு தேவையான ஆர்.சி.எஸ், விஷுவல் மற்றும் ஐஆர் விரிவாக்க அமைப்புகளை கொண்டுள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்ட்ட அபியாஸ் எதிரிகளின் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க கூடியது.
Also Read: இலகுரக போர் விமானம், ஹெலிகாப்டருக்கான உற்பத்தி ஆலையை எகிப்தில் அமைக்க உள்ள இந்தியா..?