ஶ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலிசார் ஒருவர் உயிரிழப்பு..

ஶ்ரீநகரின் டவுன் டவுன் பகுதியில் உள்ள போலிஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு போலிசார் உயிரிழந்தார் மற்றும் இரண்டு போலிசார் காயமடைந்துள்ளனர்.

லால் பஜாரில் உள்ள ஜிடி கோயங்கா பள்ளிக்கு வெளியே பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு போலிசார் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் அனைவரும் தப்பியோடிவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் முஷ்டாக் அகமது கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களான பயாஸ் அகமது மற்றும் அபு பக்கர் ஆகியோர் தாக்குதலில் காயமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை 7,15 மணி அளவில் நடைபெற்றுள்ளது. காயமடைந்த மருத்துவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த உடன் அப்பகுதியில் போலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

காஷ்மீர் போலிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏஎஸ்ஐ முஷ்டாக் அகமது வீரமரணம் அடைந்தார். பணியின் போது அவரது உயர்ந்த தியாகத்திற்காக தியாகிக்கு நாங்கள் மிகுந்த அஞ்சலி செலுத்துகிறோம். காயமடைந்த மற்ற இரண்டு வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.