அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய நாணயம்.. பிரேசில் அதிபர் அறிவிப்பு..

அக்டோபர் 30 அன்று பிரேசிலின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, அமெரிக்க டாலருக்கு எதிராக லத்தீன் அமெரிக்காவின் லாடமில் என்ற ஒற்றை நாணயத்தை வலியுறுத்தி உள்ளார்.

லூலா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பணவீக்கம் மற்றும் அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதற்கு பதிலாக மாற்று நாணமாக ஒன்றை கொண்டு வர வேண்டும் என கூறி இருந்தார்.

தமது கண்டத்தில் அமெரிக்க டாலருக்கு பதிலாக ஒரு நாணயத்தை கொண்டுவருவது மற்றும் அவற்றின் சாத்தியக்கூறுகள் குறித்து லூலா தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் போது, நாங்கள் டாலரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என லூலா தெரிவித்து இருந்தார். லூலாவின் கட்சி அதிகாரிகளின் தகவலின்படி, இந்த நாணயம் SUR (ஸ்பானிஷ் தெற்கு) என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் நடந்த 14வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகள் ஒரே நாணயத்தை உருவாக்க வேண்டும் என்ற முன்மொழிவை அறிவித்தார். இதுதவிர சீனாவும் ரஷ்யாவும் ஒரு தங்க நாணயத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.