ஆப்கானிதான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் குண்டு வெடிப்பு.. பொதுமக்கள் இருவர் உயிரிழப்பு..

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதனை தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹிதீன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தலைநகர் காபூலில் உள்ள ஈத்கா மசூதியில் பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேர்க்கவில்லை. இருப்பினும் தாலிபான்களுக்கு எதிரான இயக்கம் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் ஐஎஸ் அமைப்பினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 35 தாலிபான்கள் பலியாகினர். இந்த நிலையில் இந்த தாக்குதலையும் ஐஎஸ் அமைப்பினரே நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆட்சி நடத்துவது தொடர்பாக ஐஎஸ் மற்றும் தாலிபான்கள் இடையே மோதல் இருந்து வருகிறது.

தாலிபான்களின் முக்கிய தலைவரான முல்லா பரதரையே ஐஎஸ் அமைப்பினர் பிணை கைதியாக பிடித்து ஆட்சி அமைப்பதில் முக்கிய பதவிகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதனாலயே ஐஎஸ் அமைப்பினருக்கும் தாலிபான்களுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது.

Also Read: பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி..?

ஐஎஸ் அமைப்பினர் நங்கர்ஹாரை தலைமையிடமாக கொண்டு செயபட்டு வருகின்றனர். மேலும் தாலிபான் உள்ளேயே பல இயக்கங்கள் இருப்பதால் இந்த தாக்குதலை யார் நிகழ்த்தியது என தெரியவில்லை. மேலும் பஞ்ச்ஷீர் மகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நார்த்தன் அலையன்ஸ் குழுவினரும் தாலிபான்களை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல்.. பொதுமக்கள் ஒருவர் உயிரிழப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *