13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 9 பேர்: ம.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

மத்திய பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் 5 நாட்களில் 2 முறை கடத்தப்பட்டு 9 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆறு நாட்களில் பெண்களுக்கு எதிராக மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நான்கு பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஆளும் பாஜக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தகவல்படி, 13 வயது சிறுமி ஜனவரி 4ஆம் தேதி ஒரு வாலிபரால் முதலில் கடத்தப்பட்டார், பின்னர் இரண்டு நாட்களாக அவரும், அவரது ஆறு நண்பர்களும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஜனவரி 5ம் தேதி இதனை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி இறக்கி விட்டு சென்றுள்ளனர். இதனால் சிறுமி யாரிடமும் கூறவில்லை.

ஜனவரி 11 அன்று சிறுமியை கடத்தி சென்ற 7 பேரில் ஒருவன் மீண்டும் சிறுமியை கடத்தியுள்ளனர். அங்கு மூன்று பேர் மீண்டும் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கூறினர்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் அவரை மீண்டும் கடத்தி, இரண்டு லாரி டிரைவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமி வெள்ளிக்கிழமை அதிகாலை அங்கிருந்து தப்பிவிட்டதாக போலிசார் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், ஜனவரி 9ம் தேதி சித்தி மாவட்டத்தில் 48 பெண் ஒருவரை அவரது வீட்டிற்குள் புகுந்த 5 பேர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, அந்த பெண்ணின் அந்தரங்க பகுதிகளில் இரும்பு கம்பியை சொருகியதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *