கேரளாவின் பாலகோட்டில் 40 பெட்டிகளில் 8,000 ஜெலட்டின் குச்சிகள், வெடிபொருட்கள் பறிமுதல்..

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷோரனூர் 10வது வார்டு வதனம்குருஷி பகுதியில் உள்ள ஒரு குவாரி அருகே 8,000 க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய 40 பெட்டிகள், ஏராளமான வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அட்டைப்பெட்டியிலும் சுமார் 200 ஜெலட்டின் குச்சிகள் இருந்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை அன்று வதனம்குருஷி பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் ஜெலட்டின் குச்சிகளை கொண்ட பெட்டிகளை முதலில் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்வப இடத்திற்கு வந்த போலிசார் பெட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குவாரி உரிமையாளரிடம் போலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அருகில் உள்ள CCTV வீடியோக்களையும் போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுபோன்ற வெடிபொருட்களை ஏற்கனவே பலமுறை பார்த்து இருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர்களை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். ஜூலை 28 அன்று தமிழகத்தின் சேலத்தில் ஆசிப் என்ற நபரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். ஆசிப் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக NIA அமைப்பினர் கூறினர்.

10 மணி நேர விசாரணைக்கு பிறகு ஆசிப் காவலில் வைக்கப்பட்டார். ஆசிப் மீது UAPA மற்றும் இந்திய தண்டனை சட்டம் உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 25 அன்று தமிழகத்தில் அடில் என்கிற ஜுபா என்ற நபரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். முன்னதாக ஜூலை 24 அன்று மத்திய குற்றப்பிரிவு போலிசார் பெங்களுர் திலக் நகர் பகுதியில் அக்தர் ஹுசைன் என்ற நபரை கைது செய்தனர்.

ஹுசைன் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் விளிம்பில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அக்தர் ஹுசைன் அல் கொய்தாவுடன் தொடர்புடையவர். அஸ்ஸாமை சேர்ந்த ஹுசைன் 7 மாதங்களுக்கு முன்பு பெங்களுர் வந்துள்ளார். பின்னர் உணவு டெலிவரி பாயாக வேலை செய்து வந்துள்ளார். தென் இந்தியாவில் தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.