கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வந்த 7 பங்களாதேஷினர் கைது..

ஜூலை 12 செவ்வாய்கிழமை அன்று கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 7 வங்கதேச நாட்டவரை கர்நாடகா போலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த 7 வங்கதேசத்தினரும் ராமநகரா மாவட்டம் பஸ்வனபுரா கிராமத்தில் உள்ள லிங்க் ஆப் கார்மென்ட்ஸ் என்ற ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து போலி இந்திய அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் அசாம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

ராமநகரா எஸ்பி சந்தோஷ் பாபு கூறுகையில், இந்திய போலி அடையாள அட்டையுடன் ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 7 பங்களாதேஷ் நாட்டவரை ராமநகர போலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் அடையாள அட்டைகள் இருந்தன. கைது செய்யப்பட்டவர்கள் சோஹைல் ராணா, சுல்பிகர், உஜ்ஜால், முனாசில், முசா ஷேக், ரஹீம் மற்றும் ஆரிப் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய் விசாரணையில், இவர்கள் அனைவரும் மே மாதம் சட்டவிரோதமாக அசாமில் நுழைந்துள்ளனர். அசாமில் ஒரு முகவரியை பயன்படுத்தி தரகர் மூலம் அவர்களின் பெயர்களில் ஆதார் அட்டையை பெற்றுள்ளனர். அசாமில் இருந்து கர்நாடகாவின் தொட்டபல்பூருக்கு சென்றனர். பின்னர் ஜூன் 1 ஆம் தேதி ராமநகரை அடைந்தனர்.

அங்கு லிங்க் ஆப் கார்மென்ட்ஸ் ஆடை தொழிற்சாலையில் வேலை பெற்று வாடகைக்கு வீடு எடுத்து வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆடை நிறுவனம் எதன் அடிப்படையில் இவர்களுக்கு வேலை வழங்கினார்கள் என தொழிற்சாலை உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்படும் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கு இந்திய அடையாள அட்டை வாங்க உதவிய தரகரை தேடி வருவதாகவும், இவர்கள் அனைவரும் வேலைக்காக மட்டும் கர்நாடகாவுக்கு வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் சதி திட்டம் உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாக ராமநகர காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.