வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 6 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது..?

வங்கதேச எல்லையை தாண்டி சட்டவிரோதமாக இந்திய எல்லையில் நுழைந்த திரிபுராவின் உனகோட்டி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கொண்ட ரோஹிங்கியா குடும்பத்தை திரிபுரா போலிசார் சனிக்கிழமை அன்று கைது செய்துள்ளனர்.

உனகோட்டி மாவட்டத்தில் ரோஹிங்கியாக்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து திரிபுரா போலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. திரிபுரா மாநில ரைபிள்ஸ் படையினர் கோர்நகர் பிளாக்கிற்கு உட்பட்ட இச்சாம்பூர் பகுதியை சேர்ந்த சஹ்னாஜ் அலியின் வீட்டில் போலிசார் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரே கும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி மற்றும் அவரது நான்கு குழந்தைகளை போலிசார் கைது செய்தனர். இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டதாக போலிசார் தெரிவித்தனர். 32 வயதான அப்துல் ரஹிம் கூறும்போது, வங்கதேசத்தில் இருந்து மேகாலயாவில் உள்ள டவ்கி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அங்கிருந்து அஸ்ஸாம் வந்து அகர்தலா செல்லும் ரயலில் ஏறியுள்ளனர். திரிபுராவில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக அகர்தலாவிற்கு சென்றதாகவும், ஏற்பாடுகளை செய்ய தவறியதால் அகர்தலாவில் இருந்து இச்சாப்பூர் வந்தடைந்ததாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

Also Read: இந்து இளைஞனை திருமணம் செய்த முஸ்லிம் பெண்.. பஞ்சாப்-ஹரியானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

அப்துல் ரஹிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய குடிமக்களாக கருதுவதற்கு தேவையான ஆவணங்களை வாங்கவே இச்சாப்பூர் வந்ததாக அப்துல் ரஹிம் தெரிவித்ததாக போலிசார் கூறியுள்ளனர். கடந்த்ன் இரண்டு ஆண்டுகளாகவே திரிபுராவில் ரோஹிங்கியாக்களின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

Also Read: மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 37 வங்கதேசத்தினரை கைது செய்த உ.பி. போலிசார்..

கைது செய்யப்பட்ட 6 பேரும் கைலாஷாஹர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஞாயிற்றுகிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேற்றங்கள் அதிகரித்து வருவதால் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: அன்னை தெரேசா சிறுமிகள் காப்பகத்தில் மதமாற்றம்.. வழக்கு பதிவு செய்தது குஜராத் காவல்துறை..

Leave a Reply

Your email address will not be published.