இந்தியா வரும் மேலும் 6 ரபேல் போர் விமானங்கள்..

ஏப்ரல் 28 ஆம் தேதி மேலும் 6 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வர உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் ஏற்கனவே 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்த நிலையில் மேலும் 6 விமானங்கள் வர உள்ளன.

கொரோனா தொற்று காரணமாக சில மாதங்கள் தாமதத்திற்கு பிறகு இப்போது படிப்படியாக ரபேல் விமானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரபேல் 4.5 ஆம் தலைமுறை போர் விமானம் ஆகும்.

தற்போது 14 ரபேல் போர் விமானங்கள் உள்ள நிலையில் மேலும் 6 விமானங்கள் வர உள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தானை சமாளிப்பதற்காக முதல் ரபேல் ஸ்குவாட்ரான் தொகுதி அம்பாலா விமானப்படை தளத்தில் செயல்பட்டு வருகிறது.

இரண்டாவது ரபேல் ஸ்குவாட்ரான் தொகுதி மேற்குவங்கத்தில் உள்ள ஹசிமாரா விமானப்படை தளத்தில் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் கிழக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். மேலும் அடுத்த மாதத்திற்குள் மேலும் 10 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸிடம் இருந்து 8.7 பில்லியன் டாலர் மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரபேல் போர் விமானங்களும் இந்தியாவிடம் வழங்கப்பட்டுவிடும் என டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *