CAA, NRC போன்ற உள்நாட்டு கலவரத்தால் நாட்டிற்கு 50 லட்சம் கோடி இழப்பு..? GPI அறிக்கையில் தகவல்..

இந்தியாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஆர்பாட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களால் நாட்டிற்கு சுமார் 50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குளோபல் பீஸ் இன்டெக்ஸ் 2022 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா பிசினஸ் இன்சைடர் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக அமைதி குறியீடு 2022 (Global Peace Index) வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ச்சியான வன்முறையால் நாடு பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. CAA. NRC, விவசாயிகள் போராட்டம், அக்னிபாத் வன்முறை, லக்கிம்பூர் வன்முறை, கான்பூர் வன்முறை, ஹிஜாப் வன்முறை போன்ற பல வன்முறை காரணங்கள் மட்டும் இல்லாமல் பயங்கரவாத தாக்குதல் மற்றும் நக்சலைட் போன்ற தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் தோராயமாக இந்தியாவிற்கு சுமார் 50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

163 நாடுகள் கொண்ட அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்று இடங்கள் முன்னேறி 135வது இடத்திலும், சீனா 54வது இடத்திலும், பாகிஸ்தான் 138வது இடத்திலும் உள்ளது. வன்முறை காரணமாக நாடு சந்தித்த இழப்பு இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 6 சதவீதம் ஆகும். இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஐஸ்லாந்து, இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

அமெரிக்கா 129 வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான், அதற்கு அடுத்தபடியாக ஏமன், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. உலகம் முழுவதும் வன்முறையால் சுமார் 1,300 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

வன்முறை இல்லாமல் இருந்திருந்தால் இந்த பணத்தை கொண்டு நாட்டின் பட்ஜெட் செலவினங்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கும் நிதியளித்திருக்க முடியும். கடந்த சில ஆண்டுகளில் மும்பை தாக்குதல் போன்று பெரிய குண்டு வெடிப்புகள் இல்லாவிட்டாலும், உள்நாட்டு பிரச்சனையால் வன்முறை அதிகமாகியுள்ளது.

சிரியா, தெற்கு சூடான் மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகள் ஆகியவை வன்முறையால் அதிக பொருளாதார இழப்புகளை கொண்டுள்ளன. ஐஸ்லாந்து, கொசோவோ மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை ஜிடிபியில் 2 சதவீத இழப்புகளை மட்டுமே கொண்டுள்ளன.

உலகம் முழுவதும் உள்நாட்டு மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2017 முதல் குறைந்துள்ளது. தெற்காசியா இரண்டாவது குறைந்த அமைதியான பிராந்தியமாக உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்திய விதம் ஆகியவற்றால் இந்தியா மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.