5 மாநில தேர்தல் முடிவுகள்: அஸ்ஸாம், புதுச்சேரியில் பாஜக ஆட்சி.. தமிழகத்தில் திமுக ஆட்சி..?

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கிறது திமுக. 160 தொகுதியில் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. திமுகவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இதுவரை பாஜகவில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுக கூட்டணி 74 இடங்களில் வெற்றிபெரும் நிலையில் உள்ளன. இன்று இரவு 12 மணிக்குள் இறுதி நிலவரம் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் 18, பாமக 6, விடுதலை சிறுத்தைகள் 4, மதிமுக 4, சிபிஐ 2, சிபிஎம் 2 இடங்களில் வெற்றி பெரும் நிலையில் உள்ளன.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி 216 இடங்களிலும், பாஜக 75 இடங்களிலும் வெற்றிப்பெரும் நிலையில் உள்ளன. மேற்குவங்கத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. மேலும் நந்திகிராம் தொகுதியில் மேற்குவங்க முதல்வர் தோல்வி அடைந்துள்ளார்.

நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி 1956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது. பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றிப்பெறும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றிபெரும் நிலையில் உள்ளது.

அஸ்ஸாமில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. பாஜக 78 இடங்களில் வெற்றிபெரும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் 46 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி 97 இடங்களிலும் காங்கிரஸ் 47 இடங்களிலும் வெற்றிப்பெரும் நிலையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *