மேற்குவங்கத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 5 குழந்தைகள் படுகாயம்..
மேற்குவங்கத்தில் ஞாயிற்றுகிழமை மால்டாவில் வெடிகுண்டு வெடித்ததில் 5 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். போலிசார் அப்பகுதியை சுற்றி வளைத்து வெடிகுண்டை வைத்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலியசக் காவல் நிலையத்திற்கு உட்பட் கோலப்கஞ்ச் பகுதியில் உள்ள கோபால்நகர் கிராமத்தை சேர்ந்த நிகில் சாஹா என்பவருக்கு சொந்தமான மாம்பழத்தோட்டத்தில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது தோட்டத்தின் அருகே பந்து போன்ற பொருட்கள் நிரப்பப்பட்ட பையை குழந்தைகள் பார்த்தனர்.
அது கிரிக்கெட் பந்து என நினைத்து எடுத்தபோது வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளது. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் குழந்தைகள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று குழந்தைகள் மால்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், இருவர் கலியாசாக் பிளாக் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்த குழந்தைகள் பிக்ரம் சாஹா(6), சுபாஜித் சாஹா(9), மிதுன் சாஹா(10), சுபால் சாஹா(8), ரைஹான் ஷேக்(4) ஆகியோர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அப்பகுதியில் இருந்த மற்ற இரண்டு பைகளை கைப்பற்றி வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.
Also Read: பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் அல்கொய்தா தளபதி சுட்டுகொலை..
மசூதிக்கு அருகே உள்ள பழத்தோட்டத்தில் பையை வைத்தது யார் என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரிய நாசவேலையின் ஒரு பகுதியாக இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என உள்ளுர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சுற்றுவட்டார பகுதியில் மேலும் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என கோபால்கஞ்ச் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: கொல்கத்தாவில் குழந்தைகள் இல்லம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்.. போலிசார் விசாரணை..
இந்த மாத தொடக்கத்தில் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள நானூர் பகுதியில் 20 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. மார்ச் 21 அன்ற 9 பேர் கொடுரமாக எரித்து கொல்லப்பட்ட கிராமத்தில் இருந்து தொலையில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் தொடர்பாக போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.