இந்தியா வந்தடைந்த மேலும் 4 ரபேல் போர் விமானங்கள்..

ரபேல் விமானத்தின் ஐந்தாவது தொகுதி இன்று பிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தது. பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானங்கள் மூலம் ரபேல் விமானங்களுக்கு எரிப்பொருள் நிரப்பப்பட்டு 8,000 கி.மீ கடந்து இந்தியா வந்தடைந்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 58,000 கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் தவனை விமானம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 5 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

ஏற்கனவே 14 ரபேல் உள்ள நிலையில் இப்போது 4 ரபேல் விமானங்கள் இந்தியா வந்துள்ளதாக தெரிகிறது. முதல் ரபேல் படைபிரிவு அம்பாலா விமான தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பிரிவு 18 ரபேல் விமானங்களை கொண்டதாக இருக்கும்.

ரபேல் போர் விமானம் 4.5 ஆம் தலைமுறை விமானம் ஆகும். மேலும் ரபேல் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியையும் பிரான்ஸ் வழங்குகிறது. அம்பாலாவிற்கு அடுத்து இரண்டாவது விமானப்படைத்தளம் மேற்குவங்கத்தில் அமைய உள்ளது.

இந்த ரபேல் விமானம் நிர்ணயிக்கப்பட்ட தேதியை விட முன்பே வழங்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தலைவர் கூறியுள்ளார். இந்த ரபேல் விமானத்தை அம்பாலா விமானதளத்தில் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *