குஜராத் அருகே பிடிபட்ட 3,000 கிலோ போதைப்பொருள்..? தாலிபான்களுக்கு தொடர்பு..

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 21,000 கோடி மதிப்புள்ள சுமார் 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 21,000 மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெராயின் ஈரான் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் குஜராத் துறைமுகத்திற்கு கப்பலில் அனுப்பப்பட்டுள்ளது. இவை ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. வருவாய் புலனாய்வு இயக்குனரக (DRI) அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இது ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இந்தியாவிற்கு கடத்தப்பட்டது உறுதியானது. ஹெராயின் உற்பத்தியில் ஆப்கானிஸ்தான் தான் முதலிடத்தில் உள்ளது. மொத்த ஹெராயின் உற்பத்தியில் 90 சதவீதம் ஆப்கானிஸ்தானில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

Also Read: தெலுங்கானாவில் அரசு பள்ளியில் இணைந்த 1 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள்..

தாலிபான்களுக்கு ஹராயின் மூலம் வருமானம் வருவதால் உற்பத்தியை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதேபோல் லட்சத்தீவு, கேரளா மற்றும் இலங்கை தமிழ்நாடு எல்லையிலும் போதை பொருட்கள் தொடர்ச்சியாக கைப்பற்றப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தடுக்கவே லட்சத்தீவில் புதிய பாதுகாப்பு சட்ட நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்து கஞ்சா செடி வளர்ப்பு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. அதனை பாகிஸ்தான், ஈரான் வழியாக இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Also Read: உலகிலேயே முதலாவது சர்வதேச புத்தமத மாநாடு.. இந்தியாவின் பீகாரில் நடைபெற உள்ளது..

Leave a Reply

Your email address will not be published.