ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை
ஜம்மு மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நேற்று இரவில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்த போது நம் வீரர்களின் தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக, பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அக்நூர் செக்டாரின் கோர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை கடுமையான தாக்குதலை தொடங்கியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதலில் நமது 4 ராணுவ வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடி தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் எல்லை அருகே பாகிஸ்தான் பகுதியில் உள்ளன.
‘இந்த வருடத்தில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது’ என பாதுகாப்பு படையினர் கூறினார்கள்.