இன்று இரவு இந்தியா வரும் மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்?

பிரான்ஸ், இந்திய விமானப்படைக்கு ரபேல் விமானங்களை வழங்கும் மூன்றாவது தொகுப்பாகும்.

இந்திய விமானப்படைக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் புதன்கிழமை அன்று பிரான்ஸிலிருந்து புறப்பட்டன. இந்த விமானங்கள் புதன்கிழமை இரவு 11 மணிக்கு குஜராத்தின் ஜாம்நகரில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2016 செப்டம்பரில் பிரான்ஸிலிருந்து 59,000 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 36 போர் விமானங்களை வாங்க விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டது. இப்போது இந்த டெலிவரி இந்திய விமானப்படையில் உள்ள ரஃபேல்களின் எண்ணிக்கையை 11 ஆக அதிகரிக்கும்.

இரண்டாவது முறையாக 3 ரஃபேல் போர் விமானங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் ஜாம்நகர் விமானதளத்தை வந்தடைந்தது. 5 ரபேல் போர் விமானங்களின் முதல் டெலிவரி ஜூலை 29ஆம் தேதி அம்பாலா விமானத்தளத்தை வந்தடைந்தது. பின்னர் அவை இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டன. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ், பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், விமானப்படைத் தலைவர் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதூரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

1997 ஜூனில் சேவையில் இணைந்த ரஷ்யாவின் சுகோய் Su-30MKI க்கு பிறகு, ரஃபேல் போர் விமானங்கள் கடந்த 23 ஆண்டுகளில் இந்திய விமானப்படையில் சேர்ந்த முதல் இறக்குமதி செய்யப்பட்ட ஜெட் விமானங்கள் ஆகும். தரை மற்றும் கடல் தாக்குதல், வான் பாதுகாப்பு மற்றும் வான் வழி கண்காணிப்பு, உளவு மற்றும் அணு ஆயுத தாக்குதல் தாக்குதல் ஆகியவற்றை இந்த ஜெட் விமானங்கள் மூலம் மேற்கொள்ள முடியும். அவைகள் கிட்டத்தட்ட 10 டன் ஆயுதங்களை எடுத்துச் செல்லும்.

ரபேல்களில் சில குறிப்பிட்ட மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உயர் தளங்களிலிருந்து செயல்படுவதற்கான குளிர் பொறி தொடக்க திறன், ரேடார் எச்சரிக்கை பெறுதல், 10 மணி நேர தரவுக்கான சேமிப்பு கொண்ட விமான தரவு ரெக்கார்டர்கள், அகச்சிவப்பு தேடல் மற்றும் டிராக் அமைப்புகள், ஜாமர்கள் மற்றும் உள்ளே வரும் ஏவுகணையைத் தடுக்க டிகோய்கள்(Decoys) ஆகியவை உள்ளன.

இந்த ரபேல் வருகை இந்திய விமானப்படைக்கு மேலும் வலிமையை சேர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *