காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. 4 வீரர்கள் காயம்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள பாந்த்சௌக் பகுதியில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மூன்று போலிசார் மற்றும் ஒரு CRPF வீரர்கள் காயமடைந்தனர்.

போலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சந்தேக நபரை பிடிப்பதற்காக ஸ்ரீநகர் போலிசார் பாந்தசௌக்கில் உள்ள கோமந்தர் மொஹல்லாவிற்கு சென்றனர். அப்போது சந்ததேக நபரின் வீட்டிற்குள் நுழைய முயன்ற போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் இரண்டு போலிசார் காயமடைந்தனர். பின்னர் நடந்த ஆரம்ப துப்பாக்கி சண்டையில் மொத்தமாக மூன்று போலிசாரும் ஒரு CRPF வீரரும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பின்னர் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதனை காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் உறுதிபடுத்தி உள்ளார்.

Also Read: இந்தியாவின் ரபேல் விமானங்களுக்கு எதிராக சீனாவின் J-10C போர் விமானத்தை வாங்கும் பாகிஸ்தான்..?

கொல்லப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் இந்த மாத தொடக்கத்தில் ஸ்ரீநகர் போலிசார் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தியவர்கள் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மூன்று போலிசார் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவன் சுஹைல் அகமது ராதர் என அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை மாலை அனந்த்நாக்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அன்று இரவு நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் மேலும் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மொத்தமாக கடந்த 36 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Also Read: இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க ஆரம்ப நிதியை வெளியிட்டது பிலிப்பைன்ஸ்..

Leave a Reply

Your email address will not be published.