இந்தியாவில் 5 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு பிறகு 21 பங்களாதேஷிகள் சொந்த ஊர் திரும்பினர்..
இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு 21 பங்களாதேஷிகள் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 21 பங்களாதேஷிகளும் வெள்ளிக்கிழமை மாலை மேற்குவங்க எல்லையில் பங்களாதேஷ் பெனாபோல் எல்லை சோதனை சாவடி வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி ஆள் கடத்தல் கும்பல் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு அழைத்து வந்து கொல்கத்தாவில் உள்ள பல்வேறு இடங்களில் வீட்டு வேலைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக கொல்கத்தா போலிஸ் அவர்களை கைது செய்தனர்.
இவர்களில் 10 பேர் பெண்கள், 6 பேர் ஆண்கள் மற்றும் 5 குழந்தைகள் அடங்குவர். பின்னர் கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை வெவ்வேறு விதிமுறைகளில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைதண்டனை முடிந்த நிலையில் இந்திய போலிசார் அவர்களை வெள்ளிக்கிழமை மாலை 6:45 மணி அளவில் பெனாபோல் சோதனை சாவடி போலிசாரிடம் ஒப்படைதனர். பெனாபோல் போவிசார் அவர்களை ஜஸ்டீஸ் கேர் மற்றும் ரைட்ஸ் ஜஷோர் ஆகிய இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் பங்களாதேஷின் நரைல், டாக்கா, ஃபரீத்பூர், பாகெர்ஹாட், குல்னா, பர்குனா, முன்ஷிகஞ்ச் மற்றும் காக்ஸ் பஜார் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
Also Read: இந்த ஆண்டுக்குள் இந்திய-வங்கதேச எல்லையில் முழுவதுமாக வேலி அமைத்து சீல் வைக்கப்படும் என BSF தகவல்
வெளியுறவு அமைச்சகம், கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரகம் மற்றும் மேற்கு வங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுப்பதற்கான சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அடிப்படையில் இந்திய அரசு வழங்கிய சிறப்பு பயண அனுமதியுடன் அவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
Also Read: ISIS அமைப்புடன் தொடர்பு.. காங்கிரஸ் கட்சி MLAவின் மருமகளை அதிரடியாக கைது செய்த NIA..