காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கார்கேவுக்கு விஜயதாரணி கடிதம்!


பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அது தொடர்பான பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக விஜயதாரணி அறிவித்துள்ளார். 

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி. கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் விஜயதாரணி. கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளதால் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அது தொடர்பான பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக விஜயதாரணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். 
 
Leave a Comment