துணை மேலாளர் என்.ஜெயகுமார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!!அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் என்.ஜெயகுமார் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், “தலைமைக் கழகத்தின் தூணாக விளங்கிய நம் அன்புக்குரிய என்.ஜெயக்குமார் மறைந்த செய்தி வந்தடைந்து என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது; அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக உழைப்பையும், வளர்ச்சியையும் அருகிலிருந்து கவனித்து வந்தேன்;

tn

தலைமைக் கழகம் அறிவகத்தில் செயல்பட்டு வந்த காலத்திலேயே தலைமைக் கழகப் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கினார்; அறிவாலயம் ஜெயக்குமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, பிரிவால் வாடும் குடும்பத்தினர், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று  தெரிவித்தார்.

tn

இந்நிலையில் அண்ணா அறிவாலய துணை மேலாளர் என்.ஜெயகுமார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Leave a Comment