கீழக்கரை ஜல்லிக்கட்டு – முதல் பரிசு ₹1லட்சம்


கீழக்கரையில் நடைபெறும் ஜல்லிகட்டுப் போட்டியில், சிறந்த காளையர் மற்றும் காளைக்கு தலா ஒரு மகேந்திரா தார் ஜீப் மற்றும் ₹1 லட்சம் ரொக்கம் பரிசு வழங்கப்படவுள்ளது. 

jalli

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் சுமார் 66 கோடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜல்லிக்கட்டில் அரங்கினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார்.  66 ஏக்கரில் ரூபாய் 64 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் தற்போது கட்டப்பட்டுள்ளது.  கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்கிறார்.  

tn

இந்நிலையில் மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு அரசு சார்பில் தலா ரூ. 1லட்சம் வழங்கப்பட உள்ளது. காளை, மாடுபிடி வீரருக்கு 2ஆம் பரிசாக ரூ.75,000, 3ஆம் பரிசாக ரூ.50,000 வழங்கப்பட உள்ளது; உபயதாரர்கள் சார்பில் சிறந்த காளை, வீரருக்கு கார், 2ஆம் இடம் பெறும் வீரர், காளைக்கு பைக் வழங்கப்பட உள்ளது.


Leave a Comment