தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை


எல்லை தாண்டி  மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழகத்தை சேர்ந்த  ஆறு மீனவர்களை கைது செய்துள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

fisher

கச்சத்தீவு – நெடுந்தீவு இடையே  மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அவர்களிடம் இருந்த 2 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டது. 

arrest

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீனவர்கள் ஆறு பேர் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களின்  குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Leave a Comment