ஏப். 16-ல் மக்களவைத் தேர்தல்?



மக்களவைத் தேர்தலை வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

election

மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் வரைவுத் திட்டத்தை வழங்கியுள்ளது. ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டெல்லியிலுள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த முறை 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 தொடங்கி மே 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது.


Leave a Comment