எடப்பாடி அணி தனியாக போட்டியிட்டால் டெபாசிட்டை இழப்பார்கள்


எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட்டால்  சேலத்தில் சேலத்தில் கூட டெபாசிட் பெறமுடியாது என ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்கு கரோனா | AIADMK Deputy  Coordinator Vaithilingam affected by Corona - hindutamil.in

தஞ்சையில் இன்று இரவு நடைபெற்ற அ.தி.மு.க  உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய  ஓ.பி.எஸ்  ஆதரவாளர் வைத்திலிங்கம், “மோடி கூட  கூட்டணி இல்லை என்கிற எடப்பாடி,  ஜெயலலிதா சொன்னது போல் இந்த லேடியா மோடியா பார்த்துவிடலாம் என்றாரே, அது போல்  எடப்பாடி, எடப்பாடியா  மோடியா என்று கூறுவாரா?  எடப்பாடி பழனிசாமி  பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு  செயல்பட்டார். எடப்பாடி  அவரை  தன்னை சூப்பர் புரட்சி தலைவர், சூப்பர் புரட்சி தலைவி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். எடப்பாடி முதல்வராக இருந்த இருந்த போது 5 ஆண்டுகளிலும் அவரை ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது. கட்சிக்காரர்களை எடப்பாடி சந்திக்கவே இல்லை.

அ.தி.மு.க வை இணைப்பதற்கு  எடப்பாடியை  தவிர எல்லோரும் தயாரா இருக்கிறார்கள். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அனுகினால் இரட்டை  இலை  முடங்கிவிடும். எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட்டால்  சேலத்தில் சேலத்தில் கூட டெபாசிட் பெறமுடியாது. எடப்பாடி இல்லாமல் கட்சியை இணைப்போம். வரும் 29-ம் தேதி தஞ்சையில்  ஓ.பி.எஸ் பங்கேற்கும் உரிமை மீட்புக் கூட்டம் நடைபெற உள்ளது உள்ளது” என்றார்.


Leave a Comment