அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் மீது இளம்பெண் மோசடி புகார்


அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்ல பாண்டியன் மகன் ஜெபசிங் மீது முன்னாள் காதலி இளம்பெண் சுகந்தி புகார் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் சுகந்தி. இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்ல பாண்டியனின் இரண்டாவது மகன் ஞானராஜ் ஜெபசிங் என்பவருடன் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் இவர் தூத்துக்குடி அன்னை தெரசா நகர் பகுதியில் ஒரு வீடு வாங்குவதற்காக 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 35 சவரன் தங்கத்தை ஜெபசிங்கிடம் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சீத செல்ல பாண்டியனின் மகன் ஞானராஜா ஜெபசிங் சுகந்திக்கு தெரியாமலேயே அவரது பெயரில் வீட்டை வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்து சுகந்தி அந்த வீட்டை தனக்கு தரும்படி கேட்கத் தொடங்கியதால், ஞானராஜ் ஜெப சிங்கிற்கும் சுகந்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு பேரும் தனித்தனியாக இருந்து வரக்கூடிய நிலையில் சுகந்தி தனது பணத்தில் வாங்கிய வீட்டை தனக்கு தர வேண்டும் என பல்வேறு முறை முறையிட்டும் தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் சீத செல்ல பாண்டியன் வேறு ஒரு நபருக்கு அந்த வீட்டை விற்பதற்காக 30 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கி இருப்பதாக இவருக்கு தெரிய வரவே நேற்று தென்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.

suganthi

இந்த நிலையில் இன்று அதிகாலை சீத செல்ல பாண்டியன் மகன் ஞானராஜ் ஜெப சிங்கை தென்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். சுகந்தி புகாரைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சித செல்ல பாண்டியன் சுகந்திக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடுமையாக பேசியதாகவும் கூறப்படுகிறது எனவே ஞானராஜபசிங்கின் தாயார் மற்றும் அவரது தந்தை முன்னாள் அமைச்சர் சீத செல்லப் பாண்டியன் மீது இன்று புகார் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்ததாக கூறியுள்ளார் சுகந்தி. தமிழக அரசு எனது விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து எனது வீட்டை எனக்கு பெற்றுத் தருவார்கள் என நம்புவதாக அவர் கூறினார்.


Leave a Comment