"கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை" – கமல்ஹாசன்மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2024-01-22 at 7.35.34 PM (1).jpeg

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில், தலைவர் கமல்ஹாசன், வரும் நாடாளுமன்ற மற்றும் அடுத்து வரவிருக்கிற சட்டமன்ற தேர்தல்களை கட்சி அணுக வேண்டிய முறை பற்றியும், கட்சி வளர்ச்சி பற்றியும் அறிவுரைகள் வழங்கினார்.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தேர்தல் கூட்டணி, தாம் போட்டியிடும் தொகுதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும், ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து 30 ஆண்டுகளுக்கு முன்பே கருத்தை கூறிவிட்டேன்” என்றார்.


Leave a Comment