கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பால் மரணமடைந்த மீனவர்


வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Another Gujarat fisherman dies in Pakistan jail; second such death in 3  months | Ahmedabad News - The Indian Express

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான வல்லம் என்ற விசைப்படகில் கடந்த 18 ஆம் தேதி பாம்பன் தங்கச்சி மடம்  மாந்தோப்பு பகுதியைச் சார்ந்த ஆர்க்கிஸ் (47) உள்ளிட்ட 9  மீனவர்கள்  மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கடந்த மூன்று நாட்களாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இவர்கள் இன்று காலை கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தங்கச்சி மடத்தைச் சார்ந்த மீனவர் ஆர்க்கிஸ்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அருகே இருந்த இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். உடனே கடற்படை அதிகாரிகள் முதல் உதவி அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆர்க்கீஸ் நடுக்கடலில் உயிரிழந்து உள்ளார். இதனை அடுத்து நாகை மாவட்டம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடல் மார்க்கமாக தங்கச்சிமடம் செல்வதற்க்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் அருகில் உள்ள கோடியக்கரை மீனவர் கிராமத்திற்கு ஆர்க்கீஸின் பிரேதம் வேதாரணியம் கடலோர காவல் குழும அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்க்கீஸ் பிரேதம் வேதாரண்யம் அரசு மருத்துவமனை சவக்கிடமிருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சக மீனவர்கள் வேதாரணியம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் செய்துள்ளனர் புகாரியின் பேரில் கடலோர காவல் குழும போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Comment