ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மற்ற இருவரின் அடையாளம் தெரியவில்லை.

தெற்கு காஷ்மீரின் சோபியான் பகுதியில் உள்ள சௌகாம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் அங்கு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பயங்கரவாதிகள் சரணடைவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

ஆனால் அதனை ஏற்காமல் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு பயங்கரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவன் சோபியான் பிராரிபோராவில் வசிக்கும் சஜாத் அகமது சாக் மற்றும் மற்றொருவன் புல்வாமாவில் உள்ள அச்சான் லிட்டரை சேர்ந்த ராஜா பாசித் யாகூப் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இரண்டு பயங்கரவாதிகளும் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.

Also Read: சீனாவின் உதவியுடன் பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வரும் சவுதி அரேபியா..?

பயங்கரவாத குழுக்களில் இளைஞர்களை சேர்ப்பதிலும் ஈடுபட்டுவந்துள்ளனர். புல்வாமாவின் ஹர்துமிர் ட்ரால் பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கி சூட்டில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 36 மணி நேரத்திற்குள் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலிஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறியுள்ளார்.

Also Read: Z ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள CRPF பெண் கமாண்டோக்கள்..

Leave a Reply

Your email address will not be published.