இந்திய இராணுவத்திற்கு 177 கோடியில் கல்யாணி M4 வாகனங்களை வாங்க ஒப்பந்தம்..
கல்யாணி எம்4 வாகனங்களை சப்ளை செய்வதற்காக புனேவை சேர்ந்த இந்திய பன்னாட்டு நிறுவனமான பாரத் ஃபோர்ஜ் நிறுவனம், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து ரூ.177.95 கோடி மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது.
அமைச்சகத்தின் ஒப்பந்தப்படி, அவசர கொள்முதல் நெறிமுறைகளின் கீழ் 200 கல்யாணி எம்4 வாகனங்களை உற்பத்தி ஆர்டர் கொடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, பாரத் போர்ஜ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்து, 14:15 மணிக்கு 610 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது, இது முந்தைய நாளைவிட கிட்டத்தட்ட 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
முன்னதாக திங்களன்று (22 பிப்ரவரி) பாரத் ஃபோர்ஜ், உலகளாவிய விண்வெளி மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான பாரமவுண்ட் குரூப் நிறுவனத்துடன் இணைந்து கவச வாகனங்களை தயாரிக்கும் திட்டத்தை அறிவித்தது. அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாரத் ஃபோர்ஜ் துணை நிர்வாக இயக்குநர் அமித் கல்யாணி கூறுகையில், இந்த ஒத்துழைப்பு இரண்டு முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தின் சிறந்த தன்மையை ஒன்றாக கொண்டு வருகிறது. கல்யாணி எம்4 ஒரு அற்புதமான புதிய தலைமுறை வாகனம், மற்றும் உலக அளவில் அனைத்து சந்தைகளிலும் பாதுகாப்பு எதிர்காலமாக அதை நிலைநிறுத்த விரும்புகிறோம் என்று கூறினார்.
கல்யாணி எம் 4 என்பது ஒரு multi-role platform ஆகும். கடினமான நிலப்பரப்பு மற்றும் IED அச்சுறுத்தல்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக செல்லவும், ஆயுதப்படைகளின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
“எதிர்காலத்தில் இந்திய ராணுவத்துடன் ‘கல்யாணி எம்4’ சேவை தொடங்கும். கல்யாணி எம்4 நிறுவனம் கடுமையான சூழலில் தொடர்ச்சியான தீவிர வாகன சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது” என்று நிறுவனங்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.