இந்திய இராணுவத்திற்கு புதிதாக 118 அர்ஜூன் டேங்குகள்.. அனுமதி வழங்கியது பாதுகாப்பு அமைச்சகம்..

பாதுகாப்பு அமைச்சகம் 118 அர்ஜூன் மார்க் 1 ஏ டாங்கியை தயாரிப்பதற்கான ஆர்டரை வழங்கியது. இதன் மதிப்பு 7,523 கோடி ரூபாய் ஆகும். இவை அனைத்தும் தமிழகத்தின் ஆவடி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன.

முதல் 5 அர்ஜூன் மார்க் 1 ஏ டாங்கியை 30 மாதங்களுக்குள் உற்பத்தி செய்யப்படும் என HVF கூறியுள்ளது. அவை இராணுவத்தால் அங்கீகரிக்கப்பட்டவுடன் வருடத்திற்கு 30 டாங்கிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக HVF கூறியுள்ளது.

இந்த அர்ஜூன் மார்க் 1 ஏ அனைத்து நிலப்பரப்பிலும், அனைத்து கால சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் எதிரிகளை கண்டறிந்து தாக்குதல் நடத்த முடியும். இராணுவம் ரஷ்யாவின் T-90S டாங்கிகளையே அதிக அளவில் பயன்படுத்தி வந்தது.

T-90S டாங்கிகளும் ஆவடி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டன. 1,657 T-90S டாங்கிகளில் இதுவரை 1,200 டாங்கிகள் இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய இராணுவத்தில் பழைய T-72 டாங்கிகள் உள்ளன. அதற்கு பதிலாக மேம்பட்ட டாங்கிகளை இராணுவத்தில் இணைக்க வேண்டிய தேவை உள்ளது.

Also Read: அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்ய உள்ள DRDO.. ஆவேசமடைந்த சீனா, பாகிஸ்தான்..

இந்த ஒப்பந்தத்தின் மூலம் 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்திய நிலபரப்புக்கு ஏற்றவாறு அர்ஜூன் மார்க் 1 ஏ டாங்க் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதன் முதல் தயாரிப்பை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய துருக்கி அதிபர் எர்டோகன்.. பதிலடி கொடுத்த ஜெய்சங்கர்..

Leave a Reply

Your email address will not be published.