டெல்லி ஜாமியா நகரில் 100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..?

தென்கிழக்கு டெல்லியின் ஜாமியா நகர், ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனையில், குடியிருப்பு பகுதியில் இருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த ஜாமியா நகர் மற்றும் ஷாஹீன் பாக் பகுதி CAA எதிர்ப்பு போராட்டத்திற்கு பேர் போன பகுதியாகும். இந்த நிலையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) மேற்கொண்ட சோதனையில் மரத்தடியில் மறைத்து வைக்கப்பட்ட 50 கிலோ ஹெராயின், 47 கிலோ சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் மற்றும் 30 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

NCB டிடிஜி துணை இயக்குநர் சஞ்சய் சிங் கூறுகையில், ஹெராயின் ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. போதைப்பொருள் பணம் ஹாவாலா மூலம் அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும் பணம் என்னும் இயந்திரங்கள் மற்றும் பிற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிங் கூறியுள்ளார்.

Also Read: எல்லை பாதுகாப்பு படையை 50 கிமீ அப்பால் அனுமதிக்க வேண்டாம்: மம்தா பானர்ஜி

மேலும் கூறிய சிங், இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களை தளமாக கொண்ட இந்தியா – ஆப்கன் சிண்டிகேட் ஒன்று செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்த சிண்டிகேட்களுக்கு உள்நாட்டில் ஹெராயின் தயாரித்தல் மற்றம் கலப்படம் செய்வதில் நிபுணத்துவம் இருப்பதாக கூறினார்.

சிண்டிகேட்டின் மன்னன் துபாயை தளமாக கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தானை தளமாக கொண்ட போதைப்பொருள் செயல்பாட்டாளர்களுடன் சில தொடர்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடல் மற்றும் நிலம் வழியே இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறியுள்ளார்.

Also Read: மேற்குவங்கத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 5 குழந்தைகள் படுகாயம்..

சிண்டிகேட்களின் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆப்கானிஸ்தான் நபர்களின் உதவியுடன் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவதாகவும் கூறியுள்ளார். கடத்தல்காரர்கள் பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியை தளமாக கொண்டவர்கள். இது தொடர்பாக மேலும் சோதனைகள் நடத்தி வருவதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 100 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.