பிரான்ஸில் இருந்து இந்தியா வரும் மேலும் 10 ரபேல் போர் விமானங்கள்..
அம்பாலா விமானதளத்தில் ஏற்கனவே 11 ரபேல் போர் விமானங்கள் உள்ளநிலையில் புதிதாக மேலும் 10 போர் விமானங்கள் அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்தியா வந்தடையும் என கூறப்படுகிறது.
லடாக்கில் சீனாவுடன் மோதல் போக்கு இருந்த நிலையில் ரோந்து பணிக்கு ரபேல் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. கடந்த 2016 ஆம் ஆண்டு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
அடுத்த மூன்று நாட்களுக்குள் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகின்றன. அதனை தொடர்ந்து 2 அல்லது 3 வாரத்திற்குள் மேலும் 7 போர் விமானங்கள் இந்தியா வந்தடையும் என கூறப்படுகின்றன.
ஏற்கனவே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 114 தேஜஸ் போர் விமானத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரபேல் விமானங்களின் வருகை இந்திய விமானப்படையை மேலும் வலிமையாக்கும்.
மேலும் இரட்டை எஞ்சின் கொண்ட இந்த ரபேல் போர் விமானங்கள் ஹம்மர் ஏவுகணைகளுடன் முதல் ஸ்குவாட்ரன் பாலகோட் விமானபடை தளத்தில் நிறுத்தப்படும், இரண்டாவது ஸ்குவாட்ரன் மேற்கு வங்கத்தில் உள்ள விமான தளத்தில் நிறுத்தப்படும்.
இந்த விமானங்கள் தரை, வான், கடல் என அனைத்து காலநிலையிலும் தாக்குதலில் ஈடுபடுத்த முடியும். மேலும் அடுத்த ஒரு 15 வருடத்திற்குள் 7 ஸ்குவாட்ரான்கள் விமானப்படையில் இணைக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய இராணுவத்தின் திறன் பல மடங்கு அதிகரிக்கும்.