திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 10 வங்கதேசத்தினர் கைது.. பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா என விசாரணை..

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 10 பேரை திருப்பூர் போலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து போலியான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வங்கதேசத்தை சேர்ந்த முகமது நஜ்ருவால் இஸ்லாம், ஆரிப் மொல்லா, முகமது அஷ்ரபுல் ஆலம், ஷரிபுல் இஸ்லாம், முகமது ஷாஹின் மியா, சைபுல், முகமது ஆலமின், அபு நயீம், முகமது அல்மின் மற்றும் முகமது ஹுமான் கபீர் ஆகியோர் மீது திருப்பூர் போலிசார் வெளிநாட்டினர் சட்டம் 1946 பிரிவு 3(2) (சி), 14 (ஏ) (6) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மேற்குவங்கம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து அங்கிருந்து ரயிலில் திருப்பூர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பல்லடம் மற்றும் வீரபாண்டியில் உள்ள பின்னலாடையில் பணிபுரிந்து வந்துள்ளனர். திங்கள்கிழமை மாலை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது முன்னுக்கு பின் முரனான பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் அவர்கள் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்ததை ஒப்புகொண்டனர். இதனை அடுத்து செவ்வாய் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Also Read: ரோஹிங்கியா முஸ்லிம்களை இந்தியாவிற்குள் கடத்தியதாக 6 பேரை கைது செய்த NIA..

அதேபோல் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) உடன் தொடர்புடைய நான்கு பேரை மத்திய பிரதேச போலிசார் கைது செய்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு போத்கயா ழுண்டுவெடிப்பில் பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளது. பின்னர் 2019 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஃபசார் அலி, இப்ராஹிம், அக்ரம் அல் ஹசன் மற்றும் முகமது அகீல் ஆகியோர் ஆவர். இந்த பயங்கரவாத நபர்கள் ஜிகாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், போபாலில் ஷ்லீப்பர் செல் ஒன்றை நிறுவி வருவதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு படை தெரிவித்துள்ளது.

Also Read: சாம்பல் நிற பட்டியலில் பாகிஸ்தான்.. ஐக்கிய அமீரகத்தையும் சாம்பல் பட்டியலில் வைத்த FATF..

மேலும் இதேபோன்று குஜராத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணை ஹவுராவில் போலிசார் கைது செய்துள்ளனர். மார்ச் 11 அன்று நான்கு பேரும் ஹவுராவில் இருந்து அகமதாபாத் நோக்கி இரயிலில் சென்றுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் போலியானது என தெரிய வந்துள்ளது. பின்னர் வதோதரா ரயில்வே காவல் துறையினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேற்குவங்கத்தை சேர்ந்த மௌஸ்மி மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த யாஸ்மின், போபிபேகம் மற்றும் நஜ்முல் அலிபுதீன் என அடையானம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் கார்டு, 6 செல்போன்கள், பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளை போலிசார் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கும் ஜமாத்-இ-முஜாஹிதின் வங்கதேச பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என போலிசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.