தெலுங்கானாவில் அரசு பள்ளியில் இணைந்த 1 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள்..

தெலுங்கானாவில் 1,25 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெலுங்கானா பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து காணப்பட்டது. இதற்கு காரணம் தனியார் பள்ளிகளில் பெற்றோர்களால் கட்டணம் கட்ட முடியாதது தான் என கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை வருடமாக வேலைக்கு செல்லாதது, வேலைக்கு சென்றாலும் குறைந்த ஊதியம் போன்ற காரணங்களால் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்த முடிவதில்லை.

தற்போது மாணவர்களின் சேர்க்கை அரசு பள்ளிகளில் அதிகமாக இருப்பதால் 100 பேர் படிக்க கூடிய பள்ளிகளில் தற்போது எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. கிட்டதட்ட 20,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிகிறது.

அதேபோல் பள்ளிகளின் உள்கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும் என பொற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களை அரசு தக்க வைத்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த அளவுக்கு மாணவர்கள் சேர்க்கை இல்லை என கூறப்படுகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை. அதனால் அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றினால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்க விடுத்துள்ளனர்.

பள்ளிகல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை, கொரோனா பரிசோதனை, சானிடைசர் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.