குடியரசு தின விழா கொடியேற்றிய ஆளுநர் விழாவை புறக்கணித்த முதல்வர் தெலங்கானாவில் பரபரப்பு
நாட்டின் 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
மாநிலங்களில் குடியரசு தின விழாவில் கவர்னர்கள் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி, தெலங்கானாவில் மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டபம் முன்பு ஆளுநர் தமிழிசை தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதுகுறித்து ஆளுநர் தமிழிசை தனது ட்விட்டர் பதிவில், “நம் இந்திய நாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு தெலங்கானா ராஜ்பவனில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினேன்.
இந்த நிகழ்ச்சியை முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும், மத்திய பா.ஜ.க. தெலங்கானா முதல்வர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்.